about us

தமிழ்நாடு தவில் நாதஸ்வர இசை பண்பாட்டு நிறுவனம்

தமிழ்நாடு தவில் நாதஸ்வர இசை பண்பாட்டு நிறுவனம் 2017ம் ஆண்டு தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. இசையின் முக்கியத்துவம் , இசைக்கலைஞர்களின் சிறப்பு , பெருமை , தனித்திறமைகளை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையிலும் , ஒடுக்கப்பட்ட இசை கலைஞர்களின் குரலாகவும் , அவர்களின் வளர்ச்சிப்பாதைக்கான ஓர் வழிகாட்டியாகவும் செயலாற்றிக் கொண்டிருக்கிறது. மேலும் ஒவ்வொரு இசைக் கலைஞருக்கும் அரசின் கலைஞர்களுக்கான முக்கிய திட்டங்கள் , சலுகைகள் , நிதியுதவியினைக் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது. கலைஞர்களின் தேவைகளை அறிந்து கொண்டு அவற்றினை செயல்படுத்த வேண்டி அரசிடம் கோரிக்கை வைத்து கலைஞர்களின் தேவையை பூர்த்தி செய்ய முனைப்பாற்றி வருகின்றது. மருங்கிக் கொண்டிருக்கும் கிராமியக் கலைகளை மீண்டும் புத்துணர்வு பெற முயற்சி மேற்கொண்டு முழு மூச்சாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம்.

26.8.2017அன்று , நமது தமிழ்நாடு தவில் நாதஸ்வர இசை பண்பாட்டு நிறுவனம் 2017ம் ஆண்டு கலைநன்மணி சு. ஸ்ரீ. பிள்ளையார் நயினார். கலைசுடர்மணி ஆர். எஸ். ஹரிஹரன் .கலைசுடர்மணி ஆ. பழனியாபிள்ளை ஆகிய மூன்று கலைஞர்களுக்கு "குமரி இசை மாமணி" பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது. மேலும் நடைபெற்ற அவ்விழாவில் மாற்றுத்திறனாளிகள் மூவருக்கு நலத்திட்ட உதவிகள் நம் நிறுவனத்தின் மூலம் வழங்கப்பட்டது. 2018ம் ஆண்டு ஜனவரி மாதம் 13ம் தேதியன்று, அரசு பஸ்சில் மூத்த கிராமிய கலைஞர்களுக்கு இலவச பயண சலுகை வழங்க வேண்டும் என தமிழ்நாடு தவில் நாதஸ்வர இசை பண்பாட்டு நிறுவனம் சார்பாக கோரிக்கை முன் வைக்கப்பட்டது. 15.7.2018 அன்று 'தவில் வித்வான்' நாஞ்சில் லய பூஷனம் என். ஜே. மணிகண்டன் அவர்களுக்கு நிறுவனத்தின் சார்பில் "குமரி இசை மாமணி" பட்டம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

1.3.2019 அன்று, கன்னியாகுமரி மாவட்டத்தில் தமிழக அரசின் இசைப்பள்ளி தொடங்க வலியுறுத்தி நமது தமிழ்நாடு தவில் நாதஸ்வர இசைப்பண்பாட்டு நிறுவனத்தின் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 14.7.2019 அன்று காலை ஆர்வம் உள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இசை போட்டிகள் நடத்தப்பட்டு அவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இசை சங்கமம் என்ற மாபெரும் விழா நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் அவ்விழாவில் சாக்ஸ்போன் இசைக்கலைஞர் ஹச். ரவீந்திரன் அவர்களுக்கும் நாதஸ்வர கலைஞர் எம். எஸ். ராஜுகுட்டி அவர்களுக்கும் தவில் கலைஞர் நாஞ்சில் என். ஜே. செல்வம் அவர்களுக்கும் நமது தமிழ்நாடு தவில் நாதஸ்வர இசைப் பண்பாட்டு நிறுவனத்தின் 'குமரி இசை மாமணி' விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. 30.11.2019 அன்று தமிழ்நாடு தவில் நாதஸ்வர இசை பண்பாட்டு நிறுவனம் சார்பில் குமரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் பெஜான்சிங் கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது.

"கலைகளை வளர்ப்போம். கலைஞர்களை பாதுகாப்போம். "